நடிகர் | விக்ரம் |
நடிகை | தமன்னா |
இயக்குனர் | விஜய் சந்தர் |
இசை | எஸ்.தமன் |
ஓளிப்பதிவு | எம்.சுகுமார் |
|
|
|
|
|
|
வட சென்னையில் இருக்கும்
சேட்டுவிடம், டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு
உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விபத்தில்
அருள்தாசுக்கு கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார்
ஆர்.கே.சுரேஷ்.
ஆனால், அருள்தாசோ, தன்னுடைய
மச்சானான விக்ரமை முன்னிறுத்துகிறார். இதிலிருந்து விக்ரமுக்கும்
ஆர்.கே.சுரேஷுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து வாகனங்களையும் ஸ்கெட்ச் போட்டு
தூக்குகிறார் விக்ரம். அப்போது, தமன்னாவின் தோழியின் வண்டியை
தூக்குகிறார்.
அப்போது தமன்னாவை பார்க்கும்
விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும்
காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும்
பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால்,
கோபமடையும் பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார்.
சிறிது
நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த
கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா?
ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே
படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஸ்கெட்ச்
கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு
தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ்
காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான
நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால்,
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில்
அதகளப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக
நடித்திருக்கும் தமன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி
இருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை
ஈர்த்திருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ்,
அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் வில்லத்தனத்தில்
மிரட்டி இருக்கிறார். சூரியின் காமெடி ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.
ஒரு
கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய்
சந்தர். விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஏமாற்றாமல்
கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு, எதிர்பார்த்திராத
கிளைமாக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.
கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை.
தமன்
இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக பின்னணி
இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் தனித்துவம்
பெற்றிருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்
சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘ஸ்கேட்ச்’ ஷார்ப்.