Monday, January 22, 2018

'காலா' டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினி

ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் டப்பிங் பணி சென்னை மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதில் இன்று தன் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். 'கரிகாலன்' என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.
இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் தொடங்கினார். 'காலா' திரைப்படம் 2018-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment