தனுஷ் தயாரிக்கும் புதிய படம்: 'கலக்கப்போவது யாரு' தீனா கதாநாயகனாக அறிமுகம்
விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம்
ஈர்த்த தீனா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தை
தனுஷ் தயாரிக்கிறார்.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' (Kattapanayile Ritwik Roshan). நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீனா கதாநாயகனாக
அறிமுகம் ஆகிறார். தீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு
நிகழ்ச்சி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ‘ப.பாண்டி’ படத்தில்
தனுஷ் நண்பராக நடித்திருக்கிறார். தற்போது தனுஷ் மூலம் கதாநாயகன் ஆகும்
வாய்ப்பு தினேஷுக்கு கிடைத்திருக்கிறது.
இயக்குநர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment