ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராகக் கருதப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஆசிஸ் அன்சாரி என்ற கலைஞருக்கு சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2017-ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில், சிறந்தத் தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான கோல்டன்
குளோப் விருது தமிழக வம்சாவளியைச் சேர்ந்த நடிகர் ஆசிஸ் அன்சாரிக்கு
வழங்கப்பட்டது. “மாஸ்டர் ஆப் நன்” தொலைக்காட்சியில் சிறப்பான நடிப்பை
வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment