Monday, January 22, 2018

வீடியோ கிறிஸ்டல் விருது 2018: ஷாருக்கானுக்கு விருது கிடைத்தது, 'ஜெய் ஹிந்தி' இந்த உரையுடன் முடிந்தது


வீடியோ கிறிஸ்டல் விருது 2018: ஷாருக்கானுக்கு விருது கிடைத்தது, 'ஜெய் ஹிந்தி' இந்த உரையுடன் முடிந்தது
ஷாருக் கான், பாலிவுட் கிங் என்று அழைக்கப்படுபவர், டாவோஸில் 48-வது உலக பொருளாதார அரங்கில் (WEF) திங்களன்று மாலை மாலை 24 கிரிஸ்டல் விருதைப் பெற்றார். நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரச்சாரங்களை நடத்த அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகை-இயக்குனர் கேட் பிளாஞ்செட் மற்றும் பாடகர் எல்டன் ஜான் ஆகியோர் இந்த நேரத்தில் விருதுகளை வழங்கினர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில், கிங் கான் தனது நாவலின் முழு இதயத்தையும் வென்றார். இந்த விருதுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் ஷாருக். இது மட்டுமல்ல, ஷாருக் இதை 'நாமஸ்கார்' மற்றும் 'ஜெய் ஹிந்த்' ஆகியோரைப் பேசுகையில் பேசினார். WHEET உச்சி மாநாட்டில் சமூக சேவைக்கு உங்கள் பங்களிப்பிற்கான விருது வழங்கப்படுகிறது.
Continue Reading →

தனுஷ் தயாரிக்கும் புதிய படம்: 'கலக்கப்போவது யாரு' தீனா கதாநாயகனாக அறிமுகம்



தனுஷ் தயாரிக்கும் புதிய படம்: 'கலக்கப்போவது யாரு' தீனா கதாநாயகனாக அறிமுகம்


விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த தீனா தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார்.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மலையாளப் படம் 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' (Kattapanayile Ritwik Roshan). நதீர்ஷா இயக்கத்தில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன், பிரயாகா நடிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீனா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். தீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷ் நண்பராக நடித்திருக்கிறார். தற்போது தனுஷ் மூலம் கதாநாயகன் ஆகும் வாய்ப்பு தினேஷுக்கு கிடைத்திருக்கிறது.

இயக்குநர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading →

ரஜினிக்குதான் எல்லா ஓட்டும்: ராம் கோபால் வர்மா கணிப்பு



ரஜினிக்குதான் எல்லா ஓட்டும்: ராம் கோபால் வர்மா கணிப்பு 


நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், "ரஜினிக்குதான் எல்லா ஓட்டும்" என பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது அவரிடம் தென்பட்ட சக்தியை இதுவரை நான் கண்டதில்லை. என் கணிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அனைவருமே ரஜினிகாந்துக்குத்தான் வாக்களிப்பார்கள். அவரை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுமே வாயடைத்துப் போகும். "தமிழகம் ஒருசிலரால் அதன் கவுரவத்தை இழந்திருக்கிறது, அதை நான் மீட்டெடுப்பேன்' என ரஜினிகாந்த் கூறியது மிகப் பெரிய விஷயம்.

ரஜினிகாந்த் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதுபோல், பவன் கல்யாணும் ஆந்திராவில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் ரஜினி அளவுக்கு பவனுக்கு துணிச்சல் இல்லை என ரசிகர்கள் எண்ணிவிடுவர். மேலும், தமிழ் சூப்பர்ஸ்டாரைவிட தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு துணிச்சல் குறைந்தால் அது தெலுங்கு மக்களுக்கு கவுரவ குறைச்சலாகிவிடும்.
இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
Continue Reading →

நிமிர்


பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உதயநிதி - நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தின் முன்னோட்டம். 

மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.

இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

போட்டோகிராபராக நடிக்கும் உதயநிதிக்கு, இந்த படத்தில் தன் சுயபலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழி வாங்கும் கதாபாத்திரம்.

ஒளிப்பதிவு - என்.கே.ஏகாம்பரம், கதை - சுயாம் புஸ்கரன், வசனம் - சமுத்திரக்கனி, இசை - தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத், படத்தொகுப்பு - நாயர் எம்.எஸ்., கலை - மோகன்தாஸ், தயாரிப்பு - சந்தோஷ் டி.குருவில்லா, இயக்கம் - பிரியதர்‌ஷன்.


படம் பற்றி கூறிய இயக்குனர்...

“இது எனக்கு ஒரு ஸ்பெ‌ஷல் படம். இவ்வளவு ஆண்டு காலம் திரைதுறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அவர் நடித்துள்ளார்.

சமுத்திரகனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ‘நிமிர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
Continue Reading →

தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது



ஆஸ்கர் விருதுகளுக்கு நிகராகக் கருதப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஆசிஸ் அன்சாரி என்ற கலைஞருக்கு சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2017-ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில், சிறந்தத் தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான கோல்டன் குளோப் விருது தமிழக வம்சாவளியைச் சேர்ந்த நடிகர் ஆசிஸ் அன்சாரிக்கு வழங்கப்பட்டது. “மாஸ்டர் ஆப் நன்” தொலைக்காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
Continue Reading →

ஸ்கெட்ச்


நடிகர் விக்ரம்
நடிகைதமன்னா
இயக்குனர்விஜய் சந்தர்
இசைஎஸ்.தமன்
ஓளிப்பதிவுஎம்.சுகுமார்





வட சென்னையில் இருக்கும் சேட்டுவிடம், டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வருகிறார் அருள்தாஸ். இவருக்கு உதவியாக ஆர்.கே.சுரேஷ் வேலை பார்த்து வருகிறார். ஒரு சிறிய விபத்தில் அருள்தாசுக்கு கை வெட்டப்படுகிறது. இவருடைய இடத்திற்கு வர ஆசைப்படுகிறார் ஆர்.கே.சுரேஷ்.

ஆனால், அருள்தாசோ, தன்னுடைய மச்சானான விக்ரமை முன்னிறுத்துகிறார். இதிலிருந்து விக்ரமுக்கும் ஆர்.கே.சுரேஷுக்கு பகை ஏற்படுகிறது. அனைத்து வாகனங்களையும் ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார் விக்ரம். அப்போது, தமன்னாவின் தோழியின் வண்டியை தூக்குகிறார்.

அப்போது தமன்னாவை பார்க்கும் விக்ரம், அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல ரவுடியாக இருக்கும் பாபுராஜாவின் காரை நண்பர்களுடன் சேர்ந்து தூக்குகிறார். இதனால், கோபமடையும்  பாபுராஜா, விக்ரமையும் நண்பர்களையும் பழிவாங்க நினைக்கிறார்.

சிறிது நாளில் விக்ரமின் நண்பர்களில் ஒவ்வொருத்தராக கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணம் யார்? விக்ரமை பாபு ராஜா கொலை செய்தாரா? ஆர்.கே.சுரேஷுடனான மோதல் என்ன ஆனது? தமன்னாவுடன் விக்ரம் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஸ்கெட்ச் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ரம். காரை ஸ்கெட்ச் போட்டு தூக்குவதிலும் சரி, வசனம் பேசும்போதும் சரி, தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காண்பித்திருக்கிறார். பல இடங்களில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளில் தன்னுடைய நடிப்பால், ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தமன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். சேட்டாக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஹரீஷ், அருள்தாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் ஆர்.கே.சுரேஷ், பாபு ராஜா ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். சூரியின் காமெடி ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது.

ஒரு கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சந்தர். விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார். திரைக்கதையில் விறுவிறுப்பு, எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். கதாபாத்திரங்களை கையாண்ட விதமும் அருமை.

தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். மாஸ் காட்சிகளில் தனித்துவம் பெற்றிருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஸ்கேட்ச்’ ஷார்ப்.
Continue Reading →

'காலா' டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினி

ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் டப்பிங் பணி சென்னை மைலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. இதில் இன்று தன் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா'. 'காலா' என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். 'கரிகாலன்' என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.
இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் தொடங்கினார். 'காலா' திரைப்படம் 2018-ம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Continue Reading →